1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:38,247 --> 00:00:39,331
இது கோடை விடுமுறை.

4
00:00:40,791 --> 00:00:42,084
-ஜாலி! கோடை விடுமுறை!
-கோடை விடுமுறை!

5
00:00:42,668 --> 00:00:44,211
குட்பை, மிஸ் ஆத்மார்!

6
00:00:48,048 --> 00:00:49,466
இதோ, மிஸ் ஆத்மார்,

7
00:00:49,550 --> 00:00:51,802
இன்னும் சில மாதங்களுக்கு இது போதும்.

8
00:00:53,345 --> 00:00:54,346
வாருங்கள்

9
00:00:57,266 --> 00:00:58,350
கோடை விடுமுறை!

10
00:01:12,531 --> 00:01:13,740
ஜாலி!

11
00:01:24,501 --> 00:01:25,502
ஆஹா!

12
00:01:32,634 --> 00:01:33,969
ஆஹா!

13
00:01:34,052 --> 00:01:35,345
ஆஹா!

14
00:01:53,488 --> 00:01:54,573
ஆம்!

15
00:02:05,876 --> 00:02:07,085
போய் அதை எடுத்து வா, ஸ்நூப்பி.

16
00:02:22,643 --> 00:02:24,686
நான் பிடித்துவிடுவேன்! பிடித்துவிடுவேன்!

17
00:02:37,908 --> 00:02:40,452
பள்ளி திறப்பு விற்பனை

18
00:02:40,536 --> 00:02:45,165
பள்ளி தொடங்கிவிட்டதா? கஷ்ட காலம்.

19
00:03:02,724 --> 00:03:05,769
அவ்வளவு தான். நீச்சல் குளத்தில்
குளிப்பது, இது தான் கடைசி.

20
00:03:06,395 --> 00:03:10,107
இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிக்குப் போக வேண்டும்
என்பதை நம்ப முடியவில்லை.

21
00:03:11,275 --> 00:03:13,694
வயிறு வலிப்பது போல் இருக்கிறது.

22
00:03:14,778 --> 00:03:19,116
கோடை விடுமுறையில் தூங்காததை எல்லாம்
இப்போது தூங்கப் போகிறேன்.

23
00:03:19,867 --> 00:03:24,037
புது பள்ளி உங்களுக்கு
புது நம்பிக்கைகளைக் கொடுக்கும், சார்.

24
00:03:24,121 --> 00:03:26,206
கற்றுக்கொள்வதற்கு நிறைய
சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.

25
00:03:26,290 --> 00:03:29,835
போன வருடம் கற்றுக்கொண்டதே
ஞாபகமிருக்கிறதா எனத் தெரியவில்லை, மார்ஸி.

26
00:03:31,086 --> 00:03:34,173
புது பள்ளிக்குப் போவது
நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.

27
00:03:34,256 --> 00:03:36,633
நாம் எப்போதும் ஒரே பள்ளியில் இருப்போம்
என நீ நினைக்கவில்லை,

28
00:03:36,717 --> 00:03:37,759
அப்படி தானே, லைனஸ்?

29
00:03:38,260 --> 00:03:41,930
நாம் நமது கடைசி வார கோடை விடுமுறையில்
கவனம் செலுத்த வேண்டும்.

30
00:03:42,514 --> 00:03:46,685
இப்போது, நான் மூன்று முறை
குட்டிக் கரணம் அடித்து குதிக்கப் போகிறேன்.

31
00:03:47,186 --> 00:03:48,520
பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

32
00:03:53,400 --> 00:03:55,068
பார்!

33
00:04:12,211 --> 00:04:15,506
அதோ, அங்கிருக்கிறது. நம் புது பள்ளி.

34
00:04:16,757 --> 00:04:20,511
புதிய பள்ளிக்கும், பழைய பள்ளிக்கும்
என்ன வித்தியாசம்?

35
00:04:21,136 --> 00:04:23,388
நீ கொஞ்சம் பதட்டமாக இருக்கிறாயா, லூசி?

36
00:04:23,472 --> 00:04:24,765
நான் ஏன் பதட்டப்படப் போகிறேன்?

37
00:04:24,848 --> 00:04:27,851
இந்த இடம் எவ்வளவு
பெரிதாக இருக்கிறது பாருங்களேன்!

38
00:04:27,935 --> 00:04:30,103
அதை மறுபடியும் சொல்.

39
00:04:31,855 --> 00:04:34,358
இது ரொம்ப பெரியது என நினைக்கிறேன்.

40
00:04:34,441 --> 00:04:35,984
புது வகுப்பறைகள்.

41
00:04:36,068 --> 00:04:37,694
புது பாடங்கள்.

42
00:04:37,778 --> 00:04:39,488
புது ஆசிரியர்கள்.

43
00:04:39,571 --> 00:04:42,241
எல்லாமே நமக்கு மாறப் போகிறது.

44
00:04:43,075 --> 00:04:44,076
எல்லாம் மாறுமா?

45
00:04:45,202 --> 00:04:47,204
எப்படி வழியைக் கண்டுபிடிப்பது

46
00:04:47,287 --> 00:04:49,915
-ஹால் வழியாகவா?
-நாம் கண்டிப்பாக தொலைந்து போய்விடுவோம்.

47
00:04:49,998 --> 00:04:51,542
நமக்கு லாக்கர்கள் கொடுப்பார்கள்.

48
00:04:52,125 --> 00:04:54,169
பாஸ்வேர்ட் எண்களை மறந்துவிட்டால்?

49
00:04:54,920 --> 00:04:56,964
அங்கு நிறைய பெரிய மாணவர்கள் இருப்பார்கள்.

50
00:04:57,047 --> 00:04:58,924
பெரிய ஆசிரியர்களும்.

51
00:04:59,007 --> 00:05:00,634
ஆசிரியர்கள் பெரிதாக இருக்க மாட்டார்கள்.

52
00:05:00,717 --> 00:05:02,177
இருக்கலாம்.

53
00:05:02,261 --> 00:05:03,679
என்னால் நீர் ஊற்றை அடைய முடியுமா என

54
00:05:03,762 --> 00:05:05,347
சந்தேகமாக இருக்கிறது.

55
00:05:06,306 --> 00:05:08,725
பள்ளி உணவு நன்றாக இருக்காது
எனக் கேள்விப்பட்டேன்.

56
00:05:10,435 --> 00:05:12,312
குறைந்தபட்சம் நாம் ஒன்றாகவாவது இருப்போம்.

57
00:05:12,396 --> 00:05:15,649
உனக்கு எப்படி அது தெரியும்? நாம்
வெவ்வேறு வகுப்பறைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

58
00:05:16,316 --> 00:05:17,985
அது கொடுமையாக இருக்குமே?

59
00:05:18,068 --> 00:05:19,778
நாம் தனியாக இருப்போம்.

60
00:05:21,780 --> 00:05:24,825
லூசி?

61
00:05:26,368 --> 00:05:27,870
நான் சொன்னதைக் கேட்டாயா?

62
00:05:27,953 --> 00:05:31,498
புது பள்ளிக்குத் தேவையான பொருள்களை
வாங்க நகரத்திற்குப் போகிறோம். நீயும் வருகிறாயா?

63
00:05:33,584 --> 00:05:37,421
சரி, கண்டிப்பாக. நீங்கள் போங்கள்.
நான் பின்னாடியே வந்துவிடுகிறேன்.

64
00:05:39,173 --> 00:05:43,385
நாம் வளரும் பொழுது, கோடை விடுமுறை
குறைந்து கொண்டே வருகிறது, இல்லையா?

65
00:05:43,468 --> 00:05:46,180
எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள், சக்.

66
00:05:46,263 --> 00:05:48,682
சந்தோஷமாக இருக்கும் போது
நேரம் போவதே தெரியாது.

67
00:05:48,765 --> 00:05:52,311
கோடை விடுமுறை எப்போதுமே இல்லாதது
வருத்தமளிக்கிறது.

68
00:06:00,611 --> 00:06:02,487
பெரிய வகுப்பறைகள்?

69
00:06:05,157 --> 00:06:06,700
புது மாணவர்கள்?

70
00:06:09,036 --> 00:06:10,662
புது ஆசிரியர்கள்?

71
00:06:12,289 --> 00:06:14,541
எல்லாமே மாறப் போகிறது.

72
00:06:21,423 --> 00:06:24,092
சிறப்பான கோடையாக இருக்கட்டும்

73
00:06:36,021 --> 00:06:38,273
சத்தமாக படித்தால் சந்தோஷப்படுவேன், மிஸ் ஆத்மார்.

74
00:06:39,274 --> 00:06:43,445
உனக்கு விதிமுறைகள் தெரியும் தானே, ஸ்நூப்பி!
பள்ளிக்குள் நாய்களுக்கு அனுமதியில்லை!

75
00:06:46,323 --> 00:06:48,575
-ஹூரே!
-வாழ்த்துக்கள், லூசி!

76
00:06:57,876 --> 00:06:59,878
எனக்கு புது பள்ளிக்குப் போக பிடிக்கவில்லை.

77
00:07:02,381 --> 00:07:04,383
இதிலிருந்து தப்பித்தால் தேவலை.

78
00:07:07,386 --> 00:07:12,099
பொது நூலகம்

79
00:07:13,684 --> 00:07:17,396
"ஏதாவது கேள்வி இருக்கிறதா?
நாங்கள் விடையளிக்கிறோம்."

80
00:07:18,188 --> 00:07:22,985
கண்டிப்பாக! நம் கேள்விக்கான பதில்கள்
நூலகத்தில் இருக்கும்.

81
00:07:25,863 --> 00:07:28,198
கோடை சிறப்பு தள்ளுபடி

82
00:07:34,538 --> 00:07:35,539
பள்ளி திறப்பு விற்பனை

83
00:07:40,627 --> 00:07:41,628
பசைகள்.

84
00:07:44,173 --> 00:07:46,133
கோடை விடுமுறையை நினைத்து ஏங்குகிறேன்.

85
00:07:46,216 --> 00:07:49,386
இன்னும் எவ்வளவு நேரமாகும், மார்ஸி?

86
00:07:50,095 --> 00:07:53,807
கிட்டத்தட்ட முடித்துவிட்டேன்.
இதோ, டஸ்டர் வாங்கிக்கொள்ளுங்கள், சார்.

87
00:07:54,516 --> 00:07:57,561
ஹே, மார்ஸி.
கால்குலேட்டர்களுக்குத் தள்ளுபடி இருக்கிறது.

88
00:08:03,901 --> 00:08:07,654
நல்ல மதிப்பெண் எடுத்து என் பெற்றோர்களை
ஆச்சரியப்படுத்தப் போகிறேன்.

89
00:08:07,738 --> 00:08:11,742
உணவிலும், உடற்பயிற்சியிலும் நன்றாக இருக்கிறேன்.
அதைத் தவிர அனைத்துமே சிரமம் தான்.

90
00:08:11,825 --> 00:08:13,368
புரிகிறது, சார்லி பிரவுன்.

91
00:08:13,452 --> 00:08:14,828
"திறமை தான் அதிகச் சுமையைத் தரும்" என

92
00:08:14,912 --> 00:08:17,581
என் பெற்றோர்கள் சொல்வார்கள்.

93
00:08:25,714 --> 00:08:27,049
ஹே! கவனம்!

94
00:08:33,096 --> 00:08:35,890
தவறாக வழிகாட்டப்பட்ட மக்களே.

95
00:08:36,517 --> 00:08:38,477
எங்கே போயிருந்தாய், லூசி?

96
00:08:38,559 --> 00:08:41,730
பள்ளிக்குத் தேவையான
அனைத்து பொருட்களையும் சேகரித்தேன்.

97
00:08:41,813 --> 00:08:43,065
பள்ளிக்குத் தேவையான பொருட்களா?

98
00:08:43,815 --> 00:08:46,527
எனக்கு அது எதுவுமே தேவையில்லை, லைனஸ்.

99
00:08:47,027 --> 00:08:50,822
நூலகத்தில் இருக்கும்
இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டேன்.

100
00:08:50,906 --> 00:08:55,244
நான் அந்த புது பள்ளிக்கு வரப் போவதில்லை.

101
00:08:55,827 --> 00:08:57,204
நீ என்ன சொல்கிறாய்?

102
00:08:57,287 --> 00:08:59,456
நாம் சிறப்புத் தேர்வினை எழுதலாம்.

103
00:08:59,540 --> 00:09:02,209
அதில் தேர்ச்சி பெற்றால், சீக்கிரம்
டிப்லமா பட்டம் வாங்கிவிடலாம்

104
00:09:02,292 --> 00:09:05,295
மீண்டும் பள்ளிக்கு வர வேண்டுமென அவசியமில்லை.

105
00:09:05,379 --> 00:09:06,797
-அவள் என்ன சொன்னாள்?
-என்ன?

106
00:09:06,880 --> 00:09:10,342
பள்ளியில் நடத்துவது
எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால்,

107
00:09:10,425 --> 00:09:13,971
தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடுவேன்.

108
00:09:14,555 --> 00:09:16,598
அப்படியொரு விஷயம் இருப்பது
யாருக்குத் தெரியும்?

109
00:09:16,682 --> 00:09:19,059
இதை ஏன் யாரும் நம்மிடம் முன்பே சொல்லவில்லை?

110
00:09:19,142 --> 00:09:21,395
இது உண்மையான தேர்வா?

111
00:09:21,478 --> 00:09:23,021
உறுதியாகச் சொல்.

112
00:09:23,105 --> 00:09:27,609
நான் அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால்,
வருடம் முழுவதும் கோடை விடுமுறையில் இருப்பேன்.

113
00:09:27,693 --> 00:09:29,862
இப்போது, நீ அனுமதித்தால்,

114
00:09:29,945 --> 00:09:32,865
பட்டமளிப்பு ஆடையை போட்டுப் பார்ப்பேன்.

115
00:09:39,913 --> 00:09:41,248
லூசி, பொறு!

116
00:09:46,920 --> 00:09:48,714
லூசி!

117
00:09:48,797 --> 00:09:50,549
-ஒரு நிமிடம்!
-தயவு செய்து, நில்!

118
00:09:53,010 --> 00:09:55,387
என்ன? ஏதாவது உதவி வேண்டுமா?

119
00:09:55,888 --> 00:09:58,307
இது என்ன பேச்சு,
பள்ளிக்குத் திரும்ப போகமாட்டேன் என்று?

120
00:09:58,390 --> 00:10:01,310
கோடை விடுமுறை முடிவு பெறாமல் இருக்குமா?

121
00:10:01,393 --> 00:10:04,980
முடிவே இல்லாத கோடை விடுமுறை சாத்தியமா?

122
00:10:05,063 --> 00:10:08,317
நான் தினமும் பியானோ வாசிப்பேன்.

123
00:10:08,400 --> 00:10:11,069
கர்வ்பால் பயிற்சி செய்ய நிறைய நேரம் கிடைக்கும்.

124
00:10:11,653 --> 00:10:16,033
எவ்வளவு வேண்டுமானாலும் பயிற்சி செய், சக்.
ஆனால் நான் உன்னை வென்றுவிடுவேன்.

125
00:10:17,910 --> 00:10:19,286
ஹே, லூசியெல்.

126
00:10:19,369 --> 00:10:22,331
நீ தேர்ச்சி பெற்றுவிடுவாய் என
உறுதியாக இருப்பதால்,

127
00:10:22,414 --> 00:10:25,125
எங்களுக்கும் சொல்லித் தருகிறாயா
நாங்களும் தேர்ச்சிப் பெறுவோமே?

128
00:10:25,626 --> 00:10:28,504
தேர்வில் வெற்றி பெற நான் உதவ வேண்டுமா?

129
00:10:29,713 --> 00:10:33,300
தெரியவில்லை.
நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.

130
00:10:34,384 --> 00:10:35,719
லூசி. தயவுசெய்.

131
00:10:37,638 --> 00:10:39,056
எல்லோருக்கும் என்ன ஆச்சு?

132
00:10:39,723 --> 00:10:43,018
நீயும் இப்படி செய்வது எனக்கு
ஆச்சரியமாக இருக்கிறது, மார்ஸி.

133
00:10:43,101 --> 00:10:45,896
நீ உன் சகோதரியை சந்தேகப்படுவது
புரிகிறது, லைனஸ்.

134
00:10:45,979 --> 00:10:49,149
ஆனால் டிப்லமா விரைவில் கிடைத்துவிட்டால்,

135
00:10:49,233 --> 00:10:51,693
கல்லூரி விண்ணப்பத்தில்
போட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

136
00:10:52,402 --> 00:10:53,946
நீ என்ன நினைக்கிறாய், ஃபிராங்க்ளின்?

137
00:10:54,571 --> 00:10:55,948
தேவையில்லாத ஆர்வம்.

138
00:10:56,031 --> 00:10:57,658
தயவு செய்து, பொறு லூசி!

139
00:10:57,741 --> 00:11:00,285
-மெதுவாக நட.
-கோடை விடுமுறை எப்போதுமே இருக்க நினைக்கிறோம்.

140
00:11:02,120 --> 00:11:03,997
கண்டிப்பாக, நான் உங்களுக்கு உதவுகிறேன்.

141
00:11:04,081 --> 00:11:06,625
நான் மட்டும் பள்ளிக்குப் போகாமல் இருந்தால்

142
00:11:06,708 --> 00:11:08,794
சலிப்பாக இருக்கும்.

143
00:11:08,877 --> 00:11:09,878
ஜாலி!

144
00:11:13,590 --> 00:11:15,551
பள்ளிக்குள் நாய்களுக்கு அனுமதியில்லை.

145
00:11:15,634 --> 00:11:18,345
நீ எப்படி என் வகுப்பிற்கு வருவாய்?

146
00:11:19,012 --> 00:11:20,097
#1
ஆசிரியர்

147
00:11:20,597 --> 00:11:24,768
என் பள்ளி, என் விதிமுறைகள்.
உன் பெயர் பட்டியலில் இருக்கிறது.

148
00:11:26,854 --> 00:11:29,439
உன்னால் ஆசிரியராக இருக்க முடியுமா, லூசி?

149
00:11:29,940 --> 00:11:34,236
ஆசிரியர்கள் நன்றாகவும், பொறுமையாகவும்,
சாதுரியமாகவும் இருப்பார்கள்.

150
00:11:34,319 --> 00:11:37,281
எல்லாவற்றையும் விட, அறிவாளிகளாக இருப்பார்கள்.

151
00:11:37,364 --> 00:11:39,283
உனக்குத் தெரியாததை எப்படி சொல்லித் தருவாய்.

152
00:11:39,366 --> 00:11:43,120
சரி, கவனி. தேர்வுக்கு இன்னும்
கொஞ்ச நாள் தான் இருக்கிறது.

153
00:11:43,203 --> 00:11:47,207
என்னுடனே இருந்து கற்றுக்கொண்டால்
வருடம் முழுவதும் கோடை விடுமுறை தான்.

154
00:11:47,291 --> 00:11:50,294
நாளை காலை "வான் பெல்ட் அகாடமியின்"
வகுப்புகள் தொடங்குகின்றன.

155
00:11:50,377 --> 00:11:51,879
ஜாலி!

156
00:11:51,962 --> 00:11:54,548
இது நல்ல படியாக முடியாது.

157
00:11:58,677 --> 00:12:02,431
-குட் மார்னிங், மாணவர்களே.
-குட் மார்னிங், லூசி!

158
00:12:02,514 --> 00:12:05,475
பொறுங்கள், இது வகுப்பறை போன்றே இல்லை.

159
00:12:05,976 --> 00:12:08,604
பேட்டி சொல்வது சரிதான். மேஜைகள் எங்கே?

160
00:12:08,687 --> 00:12:09,771
கரும்பலகை எங்கே?

161
00:12:10,397 --> 00:12:13,442
கரும்பலகை இல்லாமல் ஒரு பள்ளியா.

162
00:12:13,525 --> 00:12:18,614
எனக்கு அது எதுவுமே வேண்டாம். எனக்குத்
தேவையான அனைத்துமே என்னிடம் இருக்கிறது.

163
00:12:21,658 --> 00:12:24,620
ஹலோ, லைனஸ். நீயும் எங்களுடன் சேர
முடிவெடுத்துவிட்டாய் போல.

164
00:12:24,703 --> 00:12:28,040
அது கஷ்டம். உன்னை நீயே
முட்டாளாக்கிக் கொள்ளாதே.

165
00:12:28,123 --> 00:12:30,918
இந்தத் தேர்வில் வெற்றி பெற
ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய்?

166
00:12:31,418 --> 00:12:32,544
மாணவர்களே?

167
00:12:32,628 --> 00:12:35,005
எங்களுக்கு எப்போதுமே
கோடை விடுமுறை வேண்டும்!

168
00:12:35,714 --> 00:12:37,216
உட்காரு, லைனஸ்.

169
00:12:37,299 --> 00:12:39,843
ஆம். எங்களுக்காக இதைக் கெடுக்காதே.

170
00:12:41,929 --> 00:12:45,599
அவர்கள் சொல்வதைக் கேட்டாய் அல்லவா.
உட்கார்ந்து வகுப்பைக் கவனி.

171
00:13:07,037 --> 00:13:09,623
சரி, மாணவர்களே. ஆரம்பிக்கலாம்.

172
00:13:11,834 --> 00:13:14,670
அறிவியல். கல்வியின் முக்கியமான அம்சம்.

173
00:13:14,753 --> 00:13:16,797
அது இல்லாமல் நாம் எங்கே இருப்போம்
என யோசித்துப் பாருங்கள்.

174
00:13:17,422 --> 00:13:22,344
மின் விளக்குகள், குளிர்சாதன பெட்டிகள், வணிக
ரீதியான நாய் உணவுகள் எதுவுமே இருந்திருக்காது.

175
00:13:24,304 --> 00:13:30,519
சரி, இன்று எனக்குப் பிடித்தக் கண்டுபிடிப்பான
தொலைக்காட்சியைப் பற்றி படிக்கப் போகிறோம்.

176
00:13:30,602 --> 00:13:32,563
ஹைய்யா!

177
00:13:32,646 --> 00:13:37,609
அது எப்படி வேலை செய்கிறது?
யாருக்குமே தெரியாது. அது தான் அறிவியல்.

178
00:13:39,278 --> 00:13:42,281
தெரிந்து வைத்திருப்பது தானே அவளுடைய வேலை?
அவள் ஒரு ஆசிரியர் தானே.

179
00:13:42,906 --> 00:13:46,535
தொலைக்காட்சியில் தகவல்கள்,
கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள்,

180
00:13:46,618 --> 00:13:49,204
சட்டம் முதல் மருத்துவம் வரை,

181
00:13:49,288 --> 00:13:52,833
அழுக்கு நீக்கும் சோப்புத்தூள் வரை
எல்லாமே தெரிந்துகொள்ளலாம்.

182
00:13:52,916 --> 00:13:56,295
ஆனால் அறிவியலைக் கற்றுத்தரும்
நிகழ்ச்சியைத் தேடினால்...

183
00:14:01,383 --> 00:14:05,512
அவர் திரு. ஸ்போக். அவர் சொல்வதை
நன்றாகக் கவனியுங்கள். அவர் ஒரு விஞ்ஞானி.

184
00:14:05,596 --> 00:14:09,558
ஹே, ஆசிரியரே. உண்மையிலேயே
விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் உள்ளனரா?

185
00:14:09,641 --> 00:14:12,477
அவர்கள் நிறைய வேற்று கிரகவாசிகள்
இருக்கும் கிரகத்தில் இறங்கிவிட்டனர், அப்படிதானே?

186
00:14:19,693 --> 00:14:23,697
கணக்குப் பாடத்தைப் பார்ப்போம்.
குறிப்பாக எண்களைப் பற்றி பார்ப்போம்.

187
00:14:23,780 --> 00:14:26,867
திடீரென, தோற்றுவிட்டதைப் போல் உணர்கிறேன்.

188
00:14:27,409 --> 00:14:29,953
கவலைப்படாதீர்கள்.
இது சுலபமாகத் தான் இருக்கும்.

189
00:14:30,037 --> 00:14:32,414
இன்று, நான் சொல்லித் தர போகும் கணக்கு

190
00:14:32,497 --> 00:14:34,458
உலக வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

191
00:14:36,001 --> 00:14:37,628
பிங்கோ!

192
00:14:37,711 --> 00:14:38,921
பிங்கோவா?

193
00:14:45,511 --> 00:14:48,805
பி9. முதல் எண் பி9.

194
00:14:50,641 --> 00:14:53,852
லூசி ஒரு சிறந்த ஆசிரியர்.

195
00:14:53,936 --> 00:14:55,521
தெரியும்! யார் இப்படி நினைத்திருக்கக்கூடும்?

196
00:14:57,189 --> 00:14:58,607
ஓ62.

197
00:14:58,690 --> 00:15:01,151
படிப்பது இவ்வளவு உற்சாகமாக
இருக்குமெனத் தெரியாது.

198
00:15:01,235 --> 00:15:03,278
நாம் கணக்குப் போடுவது போலவே இல்லை.

199
00:15:05,072 --> 00:15:06,907
மறுபடியும் சொல்.

200
00:15:06,990 --> 00:15:08,825
ஜி59.

201
00:15:08,909 --> 00:15:12,329
மன்னித்துவிடுங்கள், மேடம்.
தேர்வில் இதெல்லாம் இருக்காது...

202
00:15:12,412 --> 00:15:14,206
இது கற்றுக்கொள்ளும் இடம்,

203
00:15:14,289 --> 00:15:17,960
குறுக்கிடுவதற்கான இடமில்லை, மார்ஸி.

204
00:15:18,043 --> 00:15:21,421
நான் எங்கே விட்டேன்? அட, ஆமாம். ஐ17!

205
00:15:31,640 --> 00:15:34,226
அடுத்தது, புவியியலைப் பற்றி படிக்கலாம்.

206
00:15:34,309 --> 00:15:36,520
இங்கிலாந்திற்கு உங்களை வரவேற்கிறேன்,

207
00:15:36,603 --> 00:15:39,147
மேலும் உலகின் பிரபலமான கடிகாரமான
பிக் பென்னிற்கும் வரவேற்கிறேன்.

208
00:15:39,231 --> 00:15:43,610
பிக் பென் என்று அழைத்தாலும்
அது அவ்வளவு பெரிதாக இல்லை.

209
00:15:43,694 --> 00:15:46,989
அது உண்மையானது இல்லை, சார்.
நாம் மினி-புட்டில் இருக்கிறோம்.

210
00:15:48,031 --> 00:15:50,659
இங்கிலாந்தில், அதிபரை ராணி என்பார்கள்.

211
00:15:50,742 --> 00:15:55,080
இங்கிலாந்து 1960களில் வந்த
பீட்டில் பேண்டிற்குப் பெயர் பெற்றது.

212
00:15:55,163 --> 00:15:59,543
அந்த பூச்சிகள் அமெரிக்காவிற்குச் சென்று
நம் நாட்டை அழித்துவிட்டது.

213
00:16:00,335 --> 00:16:03,297
உனக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது, லூசி.

214
00:16:03,380 --> 00:16:06,216
சொல்லித் தருவது
ரொம்ப சுலபம் எனச் சொன்னேனே.

215
00:16:06,300 --> 00:16:08,635
பொய் சொல்லத் தெரிந்தால்
எல்லாமே சுலபம் தான்.

216
00:16:35,662 --> 00:16:37,873
நாம் இப்போது
அட்லாண்ட்டிக் பெருங்கடலில் இருக்கிறோம்,

217
00:16:37,956 --> 00:16:42,294
இங்கு தான் அமிலியா ஏர்ஹார்ட்
முதன்முதலில் 1932ல் தனி பெண்ணாக

218
00:16:42,377 --> 00:16:46,256
விமானத்தை இயக்கினார்.

219
00:16:46,882 --> 00:16:49,384
அவரா அதைச் செய்தார்?
அது உண்மைதானா, மார்ஸி?

220
00:16:49,468 --> 00:16:51,094
உண்மை தான், சார்.

221
00:16:51,178 --> 00:16:53,138
அடடா!

222
00:16:53,222 --> 00:16:57,184
இதுவரை லூசியெல் சொல்லித் தந்ததில்
இது மட்டும் தான் உண்மை.

223
00:16:57,267 --> 00:17:00,187
தூணில் எழுதி இருந்ததைப் படித்திருப்பாள்.

224
00:17:00,270 --> 00:17:01,438
அமிலியா ஏர்ஹார்ட்

225
00:17:02,022 --> 00:17:03,148
ஃபோர்!

226
00:17:05,526 --> 00:17:08,862
மன்னித்துவிடுங்கள்.
நான் இங்கு சொல்லித் தர வந்திருக்கிறேன்.

227
00:17:08,945 --> 00:17:12,366
அப்படியா? இதைச் சொல்லிக்கொடு, பெண்ணே.

228
00:17:13,742 --> 00:17:17,204
ஓ-ஹோ! நேரம் கடந்தும் இங்கிருக்கிறோம்
என நினைக்கிறேன்!

229
00:17:19,080 --> 00:17:20,082
வெளியே

230
00:17:23,417 --> 00:17:25,253
சரி, இன்றைக்கு அவ்வளவு தான்.

231
00:17:25,337 --> 00:17:29,633
இப்படியே படித்தால்,
தேர்வில் வெற்றி பெற்று விடலாம்.

232
00:17:29,716 --> 00:17:31,176
ஹைய்யா!

233
00:17:31,260 --> 00:17:34,805
நன்றி. கைத்தட்ட வேண்டாம்.

234
00:17:34,888 --> 00:17:37,683
எனக்குத் தெரிந்ததெல்லாம் உங்களுக்கும்
தெரிந்திருந்தால், சொல்லித் தருவது ரொம்ப சுலபம்.

235
00:17:38,183 --> 00:17:39,935
மறுபடியும் நாளை தொடரலாம்.

236
00:17:40,018 --> 00:17:41,270
ஜாலி!

237
00:17:41,353 --> 00:17:44,565
வீட்டுப்பாடம் இல்லை, மறந்து விடாதீர்கள்!

238
00:17:46,817 --> 00:17:48,610
லூசி!

239
00:17:48,694 --> 00:17:49,695
லூசி!

240
00:17:53,657 --> 00:17:55,325
இது எந்த மாதிரி பள்ளி?

241
00:17:55,826 --> 00:18:00,664
உண்மைகளைச் சொல்லித் தரும்
பள்ளி தான் எனக்கு வேண்டும்.

242
00:18:00,747 --> 00:18:03,083
லூசியை நிறுத்த வேண்டும்.

243
00:18:03,584 --> 00:18:07,588
லூசி சொல்லித் தருவதை வைத்து
யாரும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது.

244
00:18:08,088 --> 00:18:13,010
அவள் நமக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை!
இன்று பிங்கோவில் முதல் தரம் வாங்கியுள்ளேன்.

245
00:18:14,887 --> 00:18:18,724
"மிஸ் ஆத்மார் என்ன செய்வார்?"
என யோசிக்கிறேன்.

246
00:18:19,850 --> 00:18:21,768
மிஸ் ஆத்மார்...

247
00:18:22,978 --> 00:18:23,979
அது தான் சரி!

248
00:18:25,814 --> 00:18:28,483
ஏதோ இழந்துவிட்டதைப் போல் உணர்கிறேன்.

249
00:18:37,618 --> 00:18:40,287
சிறந்த நாளுக்குச் சிறந்த பரிசு கிடைக்க வேண்டும்.

250
00:18:50,172 --> 00:18:53,175
இந்தத் தேர்வை
நடத்துவதற்கு நன்றி, மிஸ் ஆத்மார்.

251
00:18:53,258 --> 00:18:56,345
உங்களிடம் பேச நான் பட்ட கஷ்டம்
எனக்குத் தான் தெரியும்.

252
00:18:58,180 --> 00:19:00,974
நாம் பேசுவது என் சகோதரிக்குத் தெரிந்தால்...

253
00:19:02,559 --> 00:19:05,896
மிஸ் ஆத்மார்? ஹலோ? ஹலோ?

254
00:19:09,149 --> 00:19:10,400
துரோகம்!

255
00:19:10,484 --> 00:19:13,403
சொல்வதைக் கேள், லூசி. உன் மாணவர்கள்
இந்தத் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என நினைத்தால்

256
00:19:13,487 --> 00:19:15,280
நீ மிகப்பெரிய முட்டாள்.

257
00:19:15,864 --> 00:19:19,660
ஒரே வாரத்தில் ஒன்பது வருட
பாடத்தைச் சொல்லித் தர முடியாது.

258
00:19:20,160 --> 00:19:21,328
நீ நீயாக இல்லை, லூசி.

259
00:19:21,411 --> 00:19:22,788
உனக்கு என்ன பிரச்சினை?

260
00:19:23,288 --> 00:19:27,876
எனக்குத் தெரியாமல் நீ மிஸ் ஆத்மாரிடம்
செல்வது தான் பிரச்சினை.

261
00:19:31,380 --> 00:19:32,756
இது என்ன?

262
00:19:32,840 --> 00:19:35,676
எனக்கு இது எதுவுமே புரியவில்லை.

263
00:19:35,759 --> 00:19:37,094
இது மாதிரி தேர்வு.

264
00:19:37,177 --> 00:19:40,013
இன்னும் கொஞ்ச நாளில்
நீங்கள் எழுதப் போகும் தேர்வைப் போன்றது.

265
00:19:40,097 --> 00:19:42,558
ஆனால் இது தேர்வே இல்லை.

266
00:19:42,641 --> 00:19:47,062
நான் இது எதையுமே நடத்தவில்லை.
எனக்கு இது எதுவுமே தெரியாது.

267
00:19:47,145 --> 00:19:51,567
உண்மைதான்.
அதற்குத் தான் நாம் பள்ளிக்குப் போகிறோம்.

268
00:19:51,650 --> 00:19:56,947
நான் முக்கோணவியல், உலக வரலாறு,
வரைபடவியலைப் பற்றி பேசுகிறேன்.

269
00:19:58,115 --> 00:20:03,745
மனித உடற்கூறியல், உயிர்வேதியியல்,
பேரியல் பொருளாதாரம், வானியல்,

270
00:20:03,829 --> 00:20:08,959
நுண்ணுயிரியல், குவாண்டம் இயற்பியல்,
அறிவியல் முறை.

271
00:20:14,381 --> 00:20:19,678
நான் தேர்ச்சியடைய மாட்டேன்.
புது பள்ளிக்குப் போயாக வேண்டும்.

272
00:20:21,513 --> 00:20:23,515
எங்களுடன் வா, லூசி.

273
00:20:23,599 --> 00:20:26,351
முடிவற்ற கோடை விடுமுறை கிடைக்காது.

274
00:20:33,400 --> 00:20:35,027
நான் போகமாட்டேன்...

275
00:20:35,736 --> 00:20:38,780
நான் இன்னும் ஒருமுறை
இந்தத் தேர்வுக்கு முயற்சி செய்கிறேன்.

276
00:20:39,364 --> 00:20:40,908
நீ இதை விட்டுவிடு, லூசி.

277
00:20:40,991 --> 00:20:43,869
முடிவற்ற கோடை விடுமுறை
என்னும் அபத்தமான கனவு

278
00:20:43,952 --> 00:20:46,496
நிறைவேறாது என அனைவரிடமும் சொல்லிவிடு.

279
00:20:46,580 --> 00:20:49,750
இல்லை! நான் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறேன்.

280
00:20:49,833 --> 00:20:54,505
இதுதான் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையென்றால்,
நான் அதைக் கற்றுக்கொண்டு

281
00:20:54,588 --> 00:20:55,881
அனைவருக்கும் சொல்லித் தருவேன்.

282
00:20:56,423 --> 00:20:59,343
நான் ஒரு ஆசிரியர்.

283
00:21:02,262 --> 00:21:04,973
நீ ஆசிரியர் அல்ல!

284
00:21:05,057 --> 00:21:09,853
இது முட்டாள்தனமான நம்பிக்கை!
நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்!

285
00:21:12,523 --> 00:21:13,941
சாதுரியமான பேச்சு.

286
00:21:18,779 --> 00:21:22,074
சரி. தேர்வில் வெற்றி பெற வேண்டுமென
உறுதியாக இருந்தால்,

287
00:21:22,157 --> 00:21:24,535
நமக்கு ஒழுங்கான வகுப்பறை தேவை.

288
00:21:35,587 --> 00:21:37,422
நன்றாக இருக்கிறது, ஆசிரியரே.

289
00:21:42,553 --> 00:21:44,388
இன்னும் நிறைய பொருட்கள் வேண்டும்.

290
00:21:55,315 --> 00:21:56,692
இதோ என் ஓய்வூதிய பணம்.

291
00:22:02,322 --> 00:22:05,450
ஹே, லூசி. எங்களுடன் படத்திற்கு வருகிறாயா?

292
00:22:05,534 --> 00:22:09,204
அடுத்த முறை வருகிறேன்.
எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

293
00:22:22,801 --> 00:22:26,013
நூலகத்தைக் கொஞ்ச நேரத்தில் மூடிவிடுவார்கள்.
நான் கிளம்புகிறேன்.

294
00:22:32,936 --> 00:22:35,397
11, 842 குளங்கள்.

295
00:22:35,480 --> 00:22:37,482
உலகளாவிய இடங்காணலமைப்பை உருவாக்க

296
00:22:37,566 --> 00:22:40,736
கிளாடிஸ் வெஸ்ட் வேலைகள் நிறைய பங்களித்துள்ளன,
அதை ஜிபிஎஸ் என்றும் சொல்வார்கள்.

297
00:22:40,819 --> 00:22:44,281
துணை வினைகள் முதல் வினைகளுக்கு முன்பு வரும்.

298
00:22:44,364 --> 00:22:46,783
4x + 3y = 35 என்றால்,

299
00:22:46,867 --> 00:22:52,581
y ஒரு பகா எண் எனில்,
x மற்றும் yயின் மதிப்பு என்ன?

300
00:23:02,591 --> 00:23:05,052
வருடத்திற்கு வருடம் இந்த ஆசிரியர்கள்

301
00:23:05,135 --> 00:23:07,095
எப்படி தான் இதைப் படிக்கிறார்களோ.

302
00:23:13,435 --> 00:23:15,521
இன்று நாம் என்ன செய்யப் போகிறோம், ஆசிரியரே?

303
00:23:15,604 --> 00:23:19,650
-நாம் இன்று இயற்கை வெளியில் நடப்போம்.
-நீச்சல் அடித்தால் என்ன?

304
00:23:20,234 --> 00:23:21,652
இங்கு என்ன நடக்கிறது?

305
00:23:22,152 --> 00:23:24,655
இங்கு ஏன் மேஜைகளும், புத்தகங்களும் இருக்கின்றன?

306
00:23:26,365 --> 00:23:28,367
இப்போது தான் உண்மையான
வகுப்பறை போல் இருக்கிறது.

307
00:23:28,450 --> 00:23:32,663
நீ என்ன செய்தாய் எனத் தெரியவில்லை, லைனஸ்,
ஆனால் இது வேலை செய்துவிட்டது.

308
00:23:45,676 --> 00:23:47,469
சரி. கவனியுங்கள், மாணவர்களே.

309
00:23:50,973 --> 00:23:53,183
எல்லோரும் தயவு செய்து கவனிக்கிறீர்களா?

310
00:23:56,687 --> 00:23:58,313
தயவு செய்து, அமைதியாக இருங்கள்.

311
00:24:00,107 --> 00:24:01,692
அமைதி!

312
00:24:03,986 --> 00:24:08,198
தேர்வுக்குக் கொஞ்ச நாள் தான் இருக்கிறது
நாம் இன்னும் நிறைய பாடங்கள் முடிக்கவேண்டும்.

313
00:24:08,282 --> 00:24:10,993
உங்களுக்கு முடிவே இல்லாத
கோடை விடுமுறை வேண்டும் தானே?

314
00:24:11,076 --> 00:24:12,578
-அட, ஆமாம்.
-கண்டிப்பாக.

315
00:24:13,203 --> 00:24:18,166
சரி, பார்க்கலாம். தயவு செய்து
அல்ஜீப்ரா புத்தகங்களை வெளியே எடுங்கள்.

316
00:24:25,757 --> 00:24:28,927
"இரண்டு மாறிலிகளை சமன் செய்தல்."

317
00:24:29,428 --> 00:24:34,016
பொறுங்கள், இதற்கு
நான் குறிப்புகள் எடுத்திருக்கிறேன்.

318
00:24:36,143 --> 00:24:39,021
நேற்று இரவு நன்றாகப் புரிந்தது.

319
00:24:41,273 --> 00:24:42,316
லூசி?

320
00:24:43,317 --> 00:24:48,363
சரி, உங்கள் அறிவியல் புத்தகங்களை வெளியே எடுங்கள்.

321
00:24:54,786 --> 00:24:57,581
"தனிம அட்டவணை இரசாயண தனிமங்களை

322
00:24:57,664 --> 00:24:59,541
அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப
வரிசைப்படுத்துகின்றன.

323
00:24:59,625 --> 00:25:05,631
முதல் குரூப்பில் லித்தியம், சோடியம் மற்றும்
பொட்டேடொடியம் இடம் பெறுகிறது.

324
00:25:05,714 --> 00:25:08,258
பொட்டாசியத்தை சொல்கிறாயா?

325
00:25:09,092 --> 00:25:15,474
அதைத்தான் சொன்னேன். அடுத்தது, ருபி...

326
00:25:15,557 --> 00:25:17,643
அது ருபிடியம்.

327
00:25:19,645 --> 00:25:21,480
இதைத் தேர்வில் கேட்பார்களா?

328
00:25:22,397 --> 00:25:23,899
நாம் ஏன் வரலாற்றைப் படிக்கக் கூடாது?

329
00:25:24,566 --> 00:25:26,860
எல்லோரும் உங்கள் வரலாற்று புத்தகங்களை எடுங்கள்.

330
00:25:32,407 --> 00:25:34,159
அப்பாடா, "த மேஃப்ளவர்."

331
00:25:34,243 --> 00:25:36,370
நான் இந்தப் பாடத்தை படித்ததில்லை
ஆனால் எனக்கு இந்த ரைம்ஸ் தெரியும்.

332
00:25:36,453 --> 00:25:43,252
பார்க்கலாம். 1492 இல்,
கொலம்பஸ் நீல பெருங்கடலில் பயணம் செய்தாரா?

333
00:25:45,879 --> 00:25:49,174
மன்னித்துவிடு, லூசி?
புத்தகத்தில் அப்படி இல்லையே.

334
00:25:49,258 --> 00:25:51,218
கண்டிப்பாக, இல்லை.

335
00:25:51,301 --> 00:25:55,472
நீங்கள் எல்லோரும் கவனிக்கிறீர்களா
எனப் பார்த்தேன்.

336
00:25:56,306 --> 00:25:58,642
நீ அந்தப் பாடத்தை மாணவர்களுக்குச்
சத்தமாக வாசித்துக்காட்டலாமே?

337
00:26:00,018 --> 00:26:03,397
"1620இல் 'த மேஃப்ளவர்' இங்கிலாந்திலிருந்து

338
00:26:03,480 --> 00:26:05,315
சுதந்திரத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

339
00:26:05,816 --> 00:26:08,527
கடல் கடந்து பயணம் செய்வது கஷ்டம்.

340
00:26:09,111 --> 00:26:12,573
மோசமான திட்டமிடலும் தவறான கணக்கீடுகளும்

341
00:26:12,656 --> 00:26:15,742
அவர்கள் நினைத்த அளவுக்கு அவர்களுக்கு
விஷயம் தெரியாது என்பதை வெளிப்படுத்தியது.

342
00:26:15,826 --> 00:26:21,582
அந்தக் குழுவிற்குப் போதுமான அனுபவம் இல்லையென்றால்,
பயணம் தோல்வியில் முடிந்திருக்கும்."

343
00:26:21,665 --> 00:26:23,125
நிறுத்து!

344
00:26:25,377 --> 00:26:26,378
என்ன?

345
00:26:31,425 --> 00:26:35,596
இனி என்னால் முடியாது.
நான் உண்மையான ஆசிரியர் இல்லை.

346
00:26:36,263 --> 00:26:37,264
என்ன?

347
00:26:38,599 --> 00:26:40,475
எனக்கு இதெல்லாம் தெரியாது.

348
00:26:44,021 --> 00:26:46,064
நாம் தேர்வில் வெற்றி பெறப் போவதில்லை.

349
00:26:46,773 --> 00:26:49,526
முடிவற்ற கோடை விடுமுறை கிடைக்காது.

350
00:26:50,611 --> 00:26:54,615
எல்லாம் முடிந்துவிட்டது. உங்கள் நம்பிக்கையை
வீணாக்கியதற்கு மன்னித்துவிடுங்கள்.

351
00:26:55,741 --> 00:26:57,201
வகுப்பு கலைகிறது.

352
00:26:59,119 --> 00:27:02,122
அது ஒரு இனிய கனவு.

353
00:27:05,000 --> 00:27:09,838
நம் கடைசி வார கோடை விடுமுறையை
இப்படி வீணாக்கிவிட்டோமே.

354
00:27:09,922 --> 00:27:11,381
இங்கிருந்து போகலாம்.

355
00:27:15,719 --> 00:27:18,514
என்னால் இனி முதல் தர மதிப்பெண்

356
00:27:18,597 --> 00:27:20,098
வாங்க முடியுமா என சந்தேகமாக இருக்கிறது.

357
00:27:23,644 --> 00:27:24,853
போதும்.

358
00:27:30,192 --> 00:27:32,277
உன்னைப் பிறகு சந்திக்கிறோம், லைனஸ்.

359
00:27:38,825 --> 00:27:40,285
உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது, லூசி.

360
00:27:40,786 --> 00:27:44,164
நம் சக்திக்கு மிஞ்சிய காரியத்தில்
ஈடுபடுவதற்குப் பெரிய தைரியம் வேண்டும்.

361
00:27:47,876 --> 00:27:50,003
என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது.

362
00:27:50,087 --> 00:27:52,422
உனக்குத் தான் பள்ளிக்குப் போகப் பிடிக்குமே.

363
00:27:52,506 --> 00:27:55,884
அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம்
பட்டம் வாங்க முயற்சிக்கிறாய்?

364
00:27:58,679 --> 00:28:00,764
எனக்கு அந்தப் புது பள்ளிக்குப் போக
பயமாகயிருக்கிறது.

365
00:28:02,432 --> 00:28:07,563
உனக்கா? பயமா? எனக்குத் தெரிந்த லூசி
இப்படி இருக்க மாட்டாள்.

366
00:28:09,147 --> 00:28:11,316
எல்லாமே மாறப் போகிறது.

367
00:28:15,863 --> 00:28:17,364
உனக்கு ஒரு இரகசியம் சொல்லவா?

368
00:28:21,034 --> 00:28:22,411
எனக்கும் பயமாகயிருக்கிறது.

369
00:28:22,911 --> 00:28:24,162
உனக்கா?

370
00:28:25,414 --> 00:28:27,040
ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள், லூசி.

371
00:28:27,875 --> 00:28:31,837
பள்ளியின் முதல் நாள்
பேருந்திலிருந்து கீழே இறங்கியதும்,

372
00:28:31,920 --> 00:28:34,089
நான் உன் பக்கத்திலேயே தான் இருப்பேன்.

373
00:28:36,300 --> 00:28:37,551
நன்றி, லைனஸ்.

374
00:28:54,693 --> 00:28:56,528
நான் தயாராக இருக்கிறேனா எனத் தெரியவில்லை.

375
00:29:01,074 --> 00:29:03,827
ஆசிரியராக இருப்பது கடினம்.

376
00:29:04,953 --> 00:29:06,830
சோர்வாக இருக்கிறது.

377
00:29:36,443 --> 00:29:37,945
மூடப்பட்டுள்ளது

378
00:29:56,505 --> 00:29:58,257
இன்று தான் பள்ளியின் முதல் நாள்.

379
00:30:28,370 --> 00:30:29,496
குட் மார்னிங்.

380
00:30:29,580 --> 00:30:31,498
-ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கிறது.
-பள்ளிக்குப் போகத் தயாரா?

381
00:30:39,381 --> 00:30:40,382
நான் தூங்கிவிட்டேன்!

382
00:30:48,515 --> 00:30:51,393
ஹே, சார்லி பிரவுன்?
சட்டையை மாற்றி போட்டிருக்கிறாய்.

383
00:31:13,582 --> 00:31:15,501
இந்த வருடம், என் மீது

384
00:31:15,584 --> 00:31:19,296
எந்த எதிர்பார்ப்பையும் வைக்கப் போவதில்லை
என முடிவுசெய்துவிட்டேன்.

385
00:31:19,379 --> 00:31:22,382
மிகுந்த எதிர்பார்ப்புத் தோல்வியைத் தருகிறது.

386
00:31:22,466 --> 00:31:26,595
எனவே, எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் தான்...

387
00:31:26,678 --> 00:31:29,389
வெற்றி கிடைக்கும்! இது எனக்குப்
பிடித்திருக்கிறது, சார்லி பிரவுன்.

388
00:31:29,473 --> 00:31:31,058
பிடித்திருக்கிறது.

389
00:31:31,141 --> 00:31:34,019
இசைக் கருவிகள் இருக்கும் அறையைப் பார்க்க
ஆவலாக இருக்கிறது.

390
00:31:34,102 --> 00:31:37,648
அவர்களிடம் சொந்தமாக ஸ்டைன்வே டி பியானோ
இருக்கிறது, தெரியுமா?

391
00:31:37,731 --> 00:31:38,982
அடடா!

392
00:31:39,066 --> 00:31:43,028
நேற்று இரவு முன்கூட்டியே எல்லாவற்றையும் செய்தது
சந்தோஷமளிக்கிறது.

393
00:31:43,111 --> 00:31:47,658
"ஸ்டெப் பிரமிட் ஆஃப் ட்ஜோசெர் "
முழுக்க சர்க்கரை கட்டிகளால் ஆனது.

394
00:31:49,284 --> 00:31:50,285
இனிமை.

395
00:32:23,694 --> 00:32:25,070
ஹே, லூசியெல்.

396
00:32:25,153 --> 00:32:28,156
அமிலியா ஏர்ஹார்ட் பற்றி
நிறைய தெரிந்து கொண்டேன்.

397
00:32:28,240 --> 00:32:29,992
அவர் குழந்தையாக இருந்தபோது,

398
00:32:30,075 --> 00:32:33,662
ஆண்கள் செய்யும் அனைத்தையும் என்னால் செய்ய முடியும்
எனச் சொல்லி, அவ்வாறே செய்தும் காட்டியிருக்கிறார்.

399
00:32:34,246 --> 00:32:37,040
அவரைப் போல தான் நான் இருக்க விரும்புகிறேன்

400
00:32:37,124 --> 00:32:40,335
அவர் உன்னைப் போன்றதொரு நபரும் கூட.

401
00:32:40,419 --> 00:32:43,505
அப்படியா? என்ன மாதிரியான நபர்?

402
00:32:43,589 --> 00:32:47,968
பயமற்ற நபர்! சவாலிலிருந்து பின்வாங்காமல்

403
00:32:48,051 --> 00:32:50,429
அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறாய்.

404
00:32:50,512 --> 00:32:53,765
இன்னும் யாரைப்பற்றி எல்லாம் படிக்கப் போகிறேன்
என ஆவலாக இருக்கிறது.

405
00:32:53,849 --> 00:32:57,060
இந்த வருடம் விழித்திருக்கப் போகிறேன்.

406
00:33:27,049 --> 00:33:30,135
சரி, எல்லோரும் எதற்காக காத்திருக்கிறீர்கள்?

407
00:33:30,219 --> 00:33:33,388
முதல் நாளே பள்ளிக்குத்
தாமதமாகப் போக விரும்புகிறீர்களா?

408
00:34:01,500 --> 00:34:03,669
நீ என் கூடவே இருப்பாய் எனச் சொன்னாய்.

409
00:34:09,091 --> 00:34:12,928
லூசி வான் பெல்ட் அகாடமியில்
இந்தக் கோடை விடுமுறையில் சிலவற்றை செய்தேன்.

410
00:34:13,469 --> 00:34:15,681
என் கோடை விடுமுறை கடற்கரைக்குச் சென்றோ

411
00:34:15,764 --> 00:34:17,975
மின்மினிப் பூச்சிகளைப் பிடித்தோ

412
00:34:18,058 --> 00:34:20,268
சூரியன் மறையும் வரை விளையாடியோ கழியவில்லை.

413
00:34:20,351 --> 00:34:21,937
அதையெல்லாம் தாண்டிய விஷயங்கள் நடந்தன.

414
00:34:22,020 --> 00:34:23,105
புது மாணவர்களை வரவேற்கிறோம்

415
00:34:23,188 --> 00:34:26,483
இந்தக் கோடை விடுமுறையில்

416
00:34:26,567 --> 00:34:28,902
ஆசிரியர்களின் சிறப்பைப் புரிந்துகொண்டேன்.

417
00:34:29,945 --> 00:34:33,114
வளரும் பருவத்தில் மாற்றங்கள் பயத்தைத் தரும்

418
00:34:33,197 --> 00:34:34,783
அப்போது ஆசிரியர்கள் நம் வாழ்வில் வந்து,

419
00:34:35,492 --> 00:34:37,786
நம் பயங்களைப் போக்கி,

420
00:34:37,870 --> 00:34:40,205
நம் கனவுகளை நனவாக்க உதவுவார்கள்.

421
00:34:43,958 --> 00:34:48,589
ஆசிரியர்கள் வெறும்
புத்தகங்களை மட்டும் படிப்பதில்லை.

422
00:34:49,089 --> 00:34:52,926
நம் மேம்பாட்டிற்காகத் தங்களையே
முழுமையாக அர்ப்பணிப்பார்கள்.

423
00:34:53,886 --> 00:34:54,928
ஹூரே!

424
00:34:57,347 --> 00:35:01,226
ஆசிரியர் என்பவர் ஒரு நண்பர்,
வழிகாட்டி, முன்மாதிரி.

425
00:35:01,852 --> 00:35:04,938
நாம் கவலையாக இருக்கும்போதும்,
பயமாக இருக்கும்போதும் நமக்கு உதவுவார்கள்.

426
00:35:13,989 --> 00:35:16,783
ஆசிரியர்கள் இந்த வகுப்பறைகளைத் தாண்டி

427
00:35:16,867 --> 00:35:22,706
நம் இதயங்களுடனும், மனதுடனும்,
நம் எதிர்காலத்துடனும் பயணிக்கும் வகையில்

428
00:35:22,789 --> 00:35:24,041
நம் வாழ்வை மாற்றுவார்கள்.

429
00:35:30,839 --> 00:35:34,593
எனவே ஆசிரியராக இருப்பதற்கு உங்களுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மிஸ் ஹால்வெர்சன்.

430
00:35:34,676 --> 00:35:38,472
மாணவர்களாகிய நாங்கள்
உங்களை அதிகம் பாராட்டுவதில்லை,

431
00:35:38,555 --> 00:35:40,891
ஆனால் எனக்கு நீங்கள் அனைவரும் ஹீரோக்கள்.

432
00:35:43,519 --> 00:35:45,187
உங்களுக்கு இது தெரிய வேண்டுமென நினைத்தேன்.

433
00:35:47,147 --> 00:35:49,399
ஹே! மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்!

434
00:35:50,150 --> 00:35:53,529
இந்தக் கூட்டத்துடன் நீங்கள் எப்படி பாடுபடுவீர்கள் என
உங்களுக்கே தெரிந்திருக்கும்.

435
00:36:08,710 --> 00:36:12,881
ஹே, ஸ்நூப்பி. 34ஆம் பக்கம்.

436
00:36:32,776 --> 00:36:35,821
சுபம்!

437
00:36:37,948 --> 00:36:40,409
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்

438
00:37:55,943 --> 00:37:57,945
தமிழாக்கம்
மேனகா மணிகண்டன்

439
00:38:06,036 --> 00:38:07,996
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.



